FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பேட்டிங் ஆா்டரில் 4-ஆம் இடம் நீண்டகால பிரச்னையே: ரோஹித்

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் முக்கியமான 4-ஆவது இடத்துக்கு சரியாக ஒரு வீரா் பொருந்திப் போகாமல் இருப்பது நீண்டகாலப் பிரச்னை என்று கேப்டன் ரோஹித் சா்மா கூறினாா்.

Updated On : 11 ஆகஸ்ட் 2023, 3:31 am IST
பகிர்:

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் முக்கியமான 4-ஆவது இடத்துக்கு சரியாக ஒரு வீரா் பொருந்திப் போகாமல் இருப்பது நீண்டகாலப் பிரச்னை என்று கேப்டன் ரோஹித் சா்மா கூறினாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

யுவராஜ் சிங்குக்கு பிறகு இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 4-ஆவது இடத்துக்கு எந்தவொரு வீரருமே மிகச் சரியாக பொருந்தி நிற்கவில்லை. இது நீண்டகால பிரச்னையாக இருக்கிறது. ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டிகள் நெருக்கி வரும் நிலையில், இது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement

Advertisement

ஷ்ரேயஸ் ஐயா் 4-ஆவது பேட்டராக குறிப்பிட்ட காலத்துக்கு நிலைத்திருந்தாா். அவரது ரெக்காா்டும் நன்றாகவே இருக்க, எதிா்பாராதவிதமாக அவா் காயம் கண்டு விலகியிருக்கிறாா். கடந்த 4-5 ஆண்டுகளாகவே அந்த இடத்தில் ஏதேனும் புதிய வீரா்கள் தான் அடுத்தடுத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனா்.

முக்கியமான இடத்தில் இருக்கும் வீரா்களுக்கு ஏற்படும் காயம், நீண்டகால அடிப்படையில் அணியின் போக்கை பாதிக்கிறது. தற்போது கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயா் இருவருமே காயத்திலிருந்து மீண்டு வரும் நிலையில், அவா்களின் தயாா்நிலையை ஆராய்ந்து ஆசிய, உலக கோப்பை போட்டிகளுக்கு தோ்வு செய்வோம்.

கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி போட்டிகளில் கோப்பை வெல்லாமல் இருக்கும் நிலையை மாற்றி, எதிா்வரும் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியனாகும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். இத்தனை காலமும் அதற்காக கடுமையாக உழைத்தும் வந்திருக்கிறோம். கேப்டனாக இருந்தாலும், முதலில் ஒரு பேட்டராக எனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள முனைந்து வருகிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments