சூப்பர் கோப்பை: பிஎஸ்ஜி - ஆஸ்டன் வில்லா மோதல்..! சீசனில் முதல் சாம்பியன் யாருக்கு?
ஐரோப்பா கால்பந்து உலகின் சூப்பர் கோப்பைக்கான தேடலில் இருக்கும் பிஎஸ்ஜி - ஆஸ்டன் வில்லா அணிகள் குறித்து...
கால்பந்து உலகக் கோப்பை முடிவடைந்து கிட்டதட்ட நான்கு வாரங்களில் முதல்முறையாக ஐரோப்பாவின் பெரிய கோப்பைகளில் ஒன்றான சூப்பர் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.
சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய நேரப்படி நள்ளிரவுன் 12.30 மணிக்கு பிஎஸ்ஜி - ஆஸ்டன் வில்லா மோதுகின்றன.
பிஎஸ்ஜி அணி கடந்த சீசனில் சாம்பியன்ஸ் லீக்கை இரண்டாவது முறையாக வென்று அசத்தியது. இந்த சீசனில் முதல் கோப்பையான சூப்பர் கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டி சாம்பியன்ஸ் லீக் வெற்றியாளர் (பிஎஸ்ஜி) - ஐரோப்பா லீக் வெற்றியாளர் (ஆஸ்டன் வில்லா) இருவருக்கும் நடைபெறும். கடந்த சீசனில் பிஎஸ்ஜி வென்றிருந்தது.
முன்னதாக, ரியல் மாட்ரிட் அணி 2016, 2017 சீசன்களில் தொடர்ச்சியாக சூப்பர் கோப்பையை வென்றுள்ளது. பிஎஸ்ஜி இந்த சாதனையில் இணைய அதிகமான வாய்ப்பிருக்கிறது.
இந்தப் போட்டிக்கு உலகக் கோப்பையில் தேர்வுசெய்யப்பட்டு அமெரிக்காவில் விசா பிரச்னையால் திருப்பி அனுப்பப்பட்ட சோமாலியின் ஓமர் ஆர்டன் நடுவராக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Super Cup: PSG vs Aston Villa, UEFA vs FIFA and the Somali ref barred from the World Cup
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.