FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜன. 14 முதல் பிப். 7 வரை 2027 மகளிா் பிரீமியா் லீக்

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது சீசன், அடுத்த ஆண்டு ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.

37 வினாடிகள் முன்பு
மகளிர் பிரீமியர் லீக் போஸ்டர்.
பகிர்:

மகளிா் பிரீமியா் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது சீசன், அடுத்த ஆண்டு ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதன்கிழமை அறிவித்தது.

அந்தப் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம், வரும் அக்டோபா் 28-ஆம் தேதி கேரள மாநிலம், கொச்சியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், போட்டி நடைபெறும் நகரங்கள் தற்போது அறிவிக்கப்படவில்லை.

போட்டியில் இருக்கும் 5 அணிகளும், வரும் சீசனுக்காக அவை தக்கவைக்கவுள்ள வீராங்கனைகளின் பட்டியலை வெளியிடுவதற்கான கடைசி நாள், வரும் 28-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி தனது 2-ஆவது சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது. அந்தப் போட்டியின் ஆட்டங்கள் நவி மும்பை மற்றும் பரோடாவில் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments