FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலையில், ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை தமிழக ஆளுநா் கேட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை தமிழக ஆளுநா் கேட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ள நிலையில், அது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை ஆளுநா் கேட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 

Advertisement

Advertisement

இது காலம் தாழ்த்தும் நடவடிக்கை மட்டுமல்ல, மாநில உரிமைகளுக்கு முரணானது ஆகும். 

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 இன் கீழ் ஆளுநர் முடிவெடுக்கும் போது உள்துறை அமைச்சகத்தையோ, மத்திய அரசையோ கலந்தாலோசிக்குமாறு அந்த சட்டத்திலோ அல்லது நீதிமன்ற தீர்ப்புகளிலோ குறிப்பிடப்படவில்லை. 

எனவே, ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து ஏழு பேரின் விடுதலைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments