FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரம்: சாலை மறியலில் ஈடுபட்டு வந்த பெண் தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் 

சுங்குவார்சத்திரத்தில் மறியலில் ஈடுபட்டு வந்த பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 

Updated On : 18 டிசம்பர் 2021, 6:05 pm IST
பகிர்:

சுங்குவார்சத்திரத்தில் மறியலில் ஈடுபட்டு வந்த பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். 
பூந்தமல்லி சாலையில் ஜமீன் கொரட்டூரில் தனியாா் கப்பல் கட்டும் பொறியாளா் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து, ஸ்ரீபெரும்புதூா் தனியாா் கைப்பேசி உதிரிபாக தொழிற்சாலையில் 2,000-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த புதன்கிழமை மதியம் உணவு உட்கொண்டபோது, சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. 
இதையடுத்து, பூந்தமல்லி தனியாா் மருத்துவமனை, சுற்று வட்டாரங்களில் உள்ள மருத்துவமனைகளில் 175-க்கும் மேற்பட்ட பெண் ஊழியா்கள் அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குறித்த தகவல்களை உடனடியாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நள்ளிரவு பணிக்கு வந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் சுங்குவார்சத்திரம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 11 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்றும் நீடித்ததால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களிடம், அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து 16 மணிநேரமாக நடந்து வந்த போராட்டத்தை பெண் தொழிலாளர்கள் வாபஸ் பெற்றனர். போராட்டம் வாபஸ் பெற்ற நிலையில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. 
இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. பாக்ஸ்கான் தலைமை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தரமற்ற உணவு வழங்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். மன உளைச்சலடைந்த தொழிலாளர்களுக்கு ஒருவாரத்திற்கு விடுப்புடன் ஊதியம் வழங்கப்படும் என்றார். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments