FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெருமாநல்லூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா பெருமாநல்லூரில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 பிப்ரவரி 2024, 2:28 pm IST
பெருமாநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பகிர்:

அவிநாசி: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா பெருமாநல்லூரில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பெருமாநல்லூர் நான்கு வழி சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விசிக திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி செயலாளர் ஏ.பி.ஆர்.மூர்த்தி தலைமை வகித்தார்.

இதில், திருப்பூர் மக்களவைத் தொகுதி செயலாளர் பழ.சண்முகம், விசிக, தலைமை நிலைய செயலாளர் பாவரசு, மாநில துணை பொது செயலாளர் கனியமுதன், மண்டல செயலாளர் வளவன் வாசுதேவன், பெருமாநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தாமணி வேலுசாமி, துணைத் தலைவர் சி.டி.சி.வேலுசாமி, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், மாரிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.  

மேலும், தமிழரின் கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவையில் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments