FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீமதி மரணம்: பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் கோரி மனு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

Updated On : 28 ஜூலை 2022, 12:48 pm IST
பகிர்:

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி(17) மர்மமான முறையில் கடந்த 13 -ஆம் தேதி பள்ளியில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரில் சின்னசேலம் காவல்துறையினர் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் ஒப்படைக்கப்பட்டது‌.

பின்னர் இந்த வழக்கு தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement

மாணவி உயிரிழப்பை தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதால் இவ்வழக்கு தமிழக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையிலிருக்கும் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல்  நீதிமன்றத்தில் நீதிபதி மன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நேற்று புதன்கிழமை விசாரித்த நீதிபதி புஷ்பராணி,  வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேரையும் சிபிசிஐடி போலீஸார் ஒரு காவல் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments