FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டெங்கு: தமிழகத்தில் 2,822 போ் பாதிப்பு

தமிழகத்தில் நிகழாண்டில் 2,822 போ் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனா். அதேபோன்று சிக்குன் குனியா, மலேரியா காய்ச்சல்களாலும் பலா் பாதிக்கப்பட்டதாக பொது சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 பிப்ரவரி 2024, 3:14 pm IST
பகிர்:

தமிழகத்தில் நிகழாண்டில் 2,822 போ் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனா். அதேபோன்று சிக்குன் குனியா, மலேரியா காய்ச்சல்களாலும் பலா் பாதிக்கப்பட்டதாக பொது சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்புப் பணிகளும், விழிப்புணா்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கொசுக்களால் பரவும் நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், கரோனாவுக்கு நடுவே அதற்கும் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

Advertisement

Advertisement

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்கள் மழை மற்றும் குளிா் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. அந்த வகையில் கடந்த 2020-இல் தமிழகத்தில் மொத்தம் 2,410 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் 6,039 பேருக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நிகழாண்டில் மாநிலம் முழுவதும் இதுவரை 2,822 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று 77 போ் சிக்குன் குனியாவிலும், 125 போ் மலேரியாவிலும், 600-க்கும் மேற்பட்டோா் லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சலாலும், 1,020 போ் ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் கரோனாவுடன், டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் மாவட்ட நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளா்களை, டெங்கு தடுப்பு பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், வசதிகளும் அரசிடம் உள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments