FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 93.76% பேர் தேர்ச்சி

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதியோருக்கான தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.  

Updated On : 20 ஜூன் 2022, 10:51 am IST
கோப்புப் படம்.
பகிர்:

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதியோருக்கான தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.  

தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் நடைபெற்றன. இதையடுத்து விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவுபெற்றன. இந்த நிலையில் இந்த வகுப்புகளுக்கான தோ்வு முடிவுகளை அரசுத் தோ்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிடப்படும் என அறிவித்தது.

அதன்படி, காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.

Advertisement

Advertisement

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழகம், புதுச்சேரியில் 93.76 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு எழுதிய 8,06,277  மாணவ, மாணவிகளில் 7,55,998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்ற மாவட்டங்களில் பெரம்பலூர் மாவட்டம் 97.95 சதவீதம், விருதுநகர் 97.27 சதவீதம், ராமநாதபுரம் 97.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்விகிதம் அதிகம் என்றும், மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், 246 அரசுப்பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24 முதல் வழங்கப்படும்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் http://tnresults.nic.in, http://dge.tn.gov.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண் விவாரங்களை அறிந்துகொள்ளலாம்.  பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்கள் அனுப்பப்படும். பள்ளிகள், நூலகங்கள் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 7,55,998

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments