FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழகத்தில் ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கும் தேதியைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். 

2 பிப்ரவரி 2024, 12:23 am IST
பகிர்:

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கும் தேதியைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், 

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும், 6  முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு  ஜூன் 1-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 18-ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏப்ரல் 8-ம் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 19-ம் தேதி பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறும். 

பள்ளிகளில் நோட்டு, புத்தகம் விநியோகிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடுமுறை நாள்களில் சிறுவர்கள் நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம். பெற்றோர்கள் அருகில் உள்ள நூலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அவர் தெரிவித்தார்.

வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போகுமா? என்று செய்தியாளர்களின் கேள்விக்கு?

வெயில் அதிகமாக இருந்தால் ஜூனில் தாமதமாக பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். 

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனைக்குப் பிறகு இந்த தகவலை வெளியிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments