FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு!

மிக்ஜம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் இன்று(செவ்வாய்க்கிழமை) ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

Updated On : 12 டிசம்பர் 2023, 1:48 pm IST
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்தியக் குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
பகிர்:

மிக்ஜம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் இன்று(செவ்வாய்க்கிழமை) ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகா் குணால் சத்யாா்த்தி தலைமையில் மத்தியக் குழுவினர், விமானம் மூலம் திங்கள்கிழமை இரவு  சென்னை வந்தடைந்தனர். 

இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்தியக் குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். வெள்ள பாதிப்புகள் குறித்து அவர் உள்ளிட்ட அதிகாரிகள் மத்தியக் குழுவினரிடம் எடுத்துரைத்தனர். 

Advertisement

Advertisement

இதையடுத்து, மத்தியக் குழுவினர் இன்று(செவ்வாய்க்கிழமை) மிக்ஜம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல மற்றொரு குழுவினர் வட சென்னை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இந்த குழு ஆய்வு செய்ய உள்ளது. 

தொடர்ந்து, நாளை மறுநாள்(டிச. 14) மத்தியக் குழு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்தபின்னர் தில்லி திரும்புகிறது. 

இந்தக் குழுவில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அதிகாரிகள் ஏ.கே. சிவஸ்ரீ, பாவ்யா பாண்டே, நிதித்துறை அதிகாரி ரங்கநாத் ஆதம், மின்சாரத் துறையை சோ்ந்த விஜயகுமாா், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி திமன்சிங், உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments