முகப்பு
தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On : 12 ஜூலை 2023, 2:13 pm IST
கோப்புப்படம்
பகிர்:

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பயன்பெற அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும்போது பயனாளர்கள் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என்று உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவு கருவியை சீரமைக்கவும்,  வரும் ஜூலை 17 ஆம் தேதிக்குள் கைரேகை பதிவு கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று  தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டம் செப். 15-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், யாா் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ற வரைமுறைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், 46 பக்கங்களைக் கொண்ட அரசாணை மற்றும் திட்டத்துக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments