FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

'வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' : திமுக எம்.பி. செந்தில்குமார்

நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் பேசியது சர்ச்சையான நிலையில், அவர் அதற்கு மன்னிப்பு கோரி பதிவிட்டுள்ளார்.

Updated On : 5 டிசம்பர் 2023, 8:46 pm IST
பகிர்:

நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் பேசியது சர்ச்சையான நிலையில், அவர் அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (டிச.4) தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளைத் தொடா்ந்து நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் பேசிய திமுக எம்.பி. செந்தில் குமார் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வென்ற மாநிலங்களைக் குறிப்பிட்டு பேசியபோது பயன்படுத்திய வார்த்தை சர்ச்சையை கிளப்பியது.

Advertisement

Advertisement

அதனையடுத்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தினர். அந்த வகையில் திமுக எம்.பி. செந்தில்குமார் அவர் பயன்படுத்திய வார்த்தைக்கு மன்னிப்பு கோரி பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “நடந்துமுடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்.

எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை, அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments