தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.960 உயர்வு!
சென்னையில் ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.960 உயர்ந்து பவுன் ரூ.46,560-க்கு விற்பனையாகிறது.
சென்னை: சென்னையில் ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.960 உயர்ந்து பவுன் ரூ.46,560-க்கு விற்பனையாகிறது.
கடந்த மூன்று நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை வியாழக்கிழமை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ. 5,820-க்கும், பவுனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.46,560-க்கும் விற்பனையானது.
இதையும் படிக்க | சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்
Advertisement
Advertisement
இதேபோன்று மூன்று நாள்களாக குறைந்து விற்பனையான வெள்ளி விலை வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.2.50 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.79.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,500 உயர்ந்து ரூ. 79,500-க்கும் விற்பனையாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.