FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மணிப்பூர் வன்முறை குறித்து சர்ச்சை பேச்சு: பத்ரி சேஷாத்ரி கைது

மணிப்பூர் வன்முறை மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிழக்கு பதிப்பக  பதிப்பாளர்  பத்ரி சேஷாத்ரியை போலீசார் கைது செய்துள்

Updated On : 29 ஜூலை 2023, 11:24 am IST
பத்ரி சேஷாத்ரி
பகிர்:


சென்னை:  மணிப்பூர் வன்முறை மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கிழக்கு பதிப்பக  பதிப்பாளர்  பத்ரி சேஷாத்ரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

மணிப்பூர் வன்முறை குறித்து “அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் எடுப்போம்” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியது குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய பத்ரி சேஷாத்ரி, மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும், அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதையும் படிக்க | சென்னையில் நிலநடுக்கம்!

Advertisement

Advertisement

இந்த நிலையில் வழக்குரைஞர் ஒருவர் அளித்த புகாரில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீசார், இரு பிரிவினரிடையே வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக, இந்திய தண்டனைச் சட்டம் 153, 153ஏ உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சென்னையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments