FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் பெற கடைசி நாள்: அமைச்சர் முத்துசாமி

அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் பெற கடைசி நாள் குறித்து தமிழக அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.

Updated On : 16 பிப்ரவரி 2024, 12:45 pm IST
அமைச்சர் முத்துசாமி (கோப்புப் படம்)
பகிர்:

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தயார் நிலையில் உள்ளது. உபரி நீர் கிடைத்ததும் தொடங்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 2016-ஆம் ஆண்டுக்கு முன்பு அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் பெற வரும் 29ஆம் தேதி கடைசி நாள் என்று வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கட்டி விற்காமல் உள்ள 3,000 வீடுகள் வாடகைக் குடியிருப்பாக மாற்றப்படும் என அமைச்சர் முத்துசாமி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

அதாவது, அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், கடந்த 2016ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட அல்லது விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017ஆம் ஆண்டு விதிகளுக்கு உள்பட்டு, எவ்வித மாற்றமும் இல்லாமல் நடப்பு பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு ஏற்கனவே செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

அதாவது, இந்த திட்டத்தின் கீழ் மனை அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த இறுதி வாய்ப்பினை தவறான பயன்படுத்திக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments