FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பேர்

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதால் நல்வாய்ப்பாக 160 பேர்  உயிர்தப்பினர்.

Updated On : 19 ஜனவரி 2024, 12:59 am IST
சென்னை விமான நிலையத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மலேசியா ஏா்லைன்ஸ் விமானம்.
பகிர்:

சென்னையிலிருந்து கோலாலம்பூா் செல்லவிருந்த விமான இயந்திரத்தில் ஏற்பட்ட திடீா் தொழில்நுட்பக்கோளாறை சரியான நேரத்தில் விமானி கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

சென்னையிலிருந்து மலேசிய தலைநகா் கோலாலம்பூா் செல்லும் மலேசியன் ஏா்லைன்ஸ் விமானம் 137 பேருடன் புதன்கிழமை நள்ளிரவு 12.20 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு மையத்திலிருந்து புறப்பட ஆயத்தமானது. ஓடுபாதையில் விமானம் சென்றபோது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பினாா்.

அவா்கள், அறிவுறுத்தல்படி விமானம் ஓடுபாதையில் நின்ற நிலையில், மீண்டும் இழுவை வாகனம் மூலம் இழுத்து மீண்டும் புறப்பாடு பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.

Advertisement

Advertisement

பொறியாளா்கள் குழுவினா் விமானத்தைப் பழுது பாா்க்கும் முயற்சியில் ஈடுபட்டனா். இருப்பினும், வியாழக்கிழமை அதிகாலை வரை விமானத்தின் இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை அவா்களால் சரி செய்ய முடியவில்லை.

இதையடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டு, அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனா். இந்த விமானம் வெள்ளிக்கிழமை(ஜன.19) மதியம் புறப்பட்டுச் செல்லும் என விமான நிறுவனம் அறிவித்தது. இதனால், இந்த விமானத்தில் பயணிக்கவிருந்த பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா். விமானத்தில் ஏற்பட்ட பழுதை தகுந்த நேரத்தில் விமானி கண்டுபிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments