நடிகர் கார்த்திக் ராஜு படம் | எக்ஸ்
தமிழ்நாடு

கார்த்திகை தீபம் தொடரில் நடிகர் விஜயகுமார்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடரில் நடிகர் விஜயகுமார் நடிக்கிறார்.

DIN

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடரில் நடிகர் விஜயகுமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை வடிவுக்கரசியும் நடிக்கவுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

கார்த்திக் ராஜு நாயகனாகவும், ஆர்த்திகா நாயகியாகவும் நடிக்கின்றனர். நகரத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடர், தற்போது கிராமத்துப் பின்னணியை மையமாக வைத்து ஒளிபரப்பாகவுள்ளது.

நாயகியாக நடித்துவந்த நடிகை ஆர்த்திகா, இறப்பதைப் போன்ற முன்னோட்ட காட்சிகள் வெளியாகின.

இந்நிலையில், கிராமத்துப் பின்னணியை மையமாக வைத்து கார்த்திகை தீபம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வில்லியாக அறிமுகமாகியுள்ளார்.

அதோடு மட்டுமின்றி நடிகர் விஜயகுமார் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக வடிவுக்கரசி நடிக்கிறார்.

கார்த்திகை தீபம் தொடரில் நடிகர் விஜயகுமார்

நகரத்துப் பின்னணியில் ஒளிபரப்பாகிவந்த கார்த்திகை தீபம் தொடர், இனி கிராமத்துப் பின்னணியை மையமாக வைத்து ஒளிபரப்பாகவுள்ளது.

நடிகர் கார்த்திக் இதில் கிராமத்து இளைஞராகவும், வேட்டி சட்டை அணிந்து தோரணையாகவும் இருக்கிறார். இனி முழுக்க முழுக்க கார்த்திக் ராஜுவுக்கு முக்கியத்துவம் கொடுத்து கார்த்திகை தீபம் தொடர் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | பிக் பாஸ் வீட்டில் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து! அர்ச்சனாவுக்காக அருண் நெகிழ்ச்சி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழப்பாவூரில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் கூட்டம்!

பெரம்பலூரில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்குப் பாராட்டு!

வீடு புகுந்து நகைகள் திருட்டு

ஆடி பெளா்ணமி சுவாமிமலையில் கிரிவலம்

தோல்வி பயத்தால் தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு: ஜி.கே. வாசன்

SCROLL FOR NEXT