நடிகர் விஷால் (கோப்புப்படம்) கோப்புப்படம்.
தமிழ்நாடு

தவெக மாநாட்டில் பங்கேற்பா? - நடிகர் விஷால் பதில்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பா? என்கிற கேள்விக்கு நடிகர் விஷால் பதிலளித்துள்ளார்.

DIN

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பா? என்கிற கேள்விக்கு நடிகர் விஷால் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பேன். அழைப்பு இல்லாவிட்டாலும் ஓரமாக நின்று மாநாட்டை பார்ப்பேன். புதிய அரசியல்வாதி வருகிறார்.

அவர் என்ன பேசப்போகிறார் என்பதை கேட்க ஒரு வாக்காளராக ஆவலாக உள்ளேன்.

வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 65% அதிகம்

நான் ஏற்கெனவே அரசியல்வாதிதான். சமூக சேவை செய்கிற அனைவருமே அரசியல்வாதிதான். தவெகவில் இணைவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.

2026 தேர்தலில் நான் வேட்பாளராக இருக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் வருகிற 27-ஆம் தேதி தவெகவின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த 4-ஆம் தேதி பந்தல்கால் நடப்பட்டது.

மாநாட்டுத் திடலை சமன் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மழையால் பணிகள் சற்று தாமதமாகின.

கடந்த 2 நாள்களாக மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani வார ராசிபலன்! | Oct 5 முதல் 11 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

சன்பிளவர்ஸ்... சான்யா மல்ஹோத்ரா!

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

கரூர் பலி: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT