FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு

காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு தாக்கல் செய்திருப்பது பற்றி....

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 6:29 pm IST
உச்ச நீதிமன்றம்
பகிர்:

காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு தாக்கல் செய்துள்ளது.

திமுகவின் விவசாயிகள் அணி செயலாளர் A.K.S விஜயன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், கடந்த ஜூலை 28ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்குமுறை குழு வழங்கியதும், ஜூலை 30ஆம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணையம் உறுதிசெய்ததுமான உத்தரவை கர்நாடக அரசுஉடனடியாக முழுமையாக செயல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்.

அதன்படி, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் பிலிகுண்டுலுவில் திறந்துவிடவும், ஜூலை 29 முதல் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையையும் ஈடு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.

Advertisement

Advertisement

கடந்த ஜூலை 26ஆம் தேதி விகிதாச்சார (Distress Sharing) அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 9.46 டி.எம்.சி. நீர்பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், 15 நாட்களுக்கு தினமும் சுமார் 7,000 கியூசெக்ஸ்தண்ணீர் பிலிகுண்டுலுவில் கிடைக்குமாறுகர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரையும், பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரின்அளவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தினசரி கண்காணித்து, அதன் அமலாக்கநிலையை உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிடவேண்டும்.

வழக்கின் உண்மை நிலைகள் மற்றும்சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நீதியைநிலைநாட்டுவதற்குத் தேவையான பிற உரிய உத்தரவுகளையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் தில்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு ஒரு நாளைக்கு 3,500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடப்பட்டது.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதில் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவரும் நிலையில் தில்லியில் கூடிய காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

summary

The DMK has filed an urgent petition in the Supreme Court seeking an order to immediately release Cauvery water to Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments