FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

2 நாள்களில் அணை நிரம்பியது எப்படி? - பெ. சண்முகம் கேள்வி!

கபினி அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது குறித்து பெ. சண்முகம் கேள்வி.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 9:26 am IST
பெ. சண்முகம் - X | CPIM Tamilnadu
பகிர்:

கபினி அணை 2 நாள்களில் நிரம்பியது எப்படி? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 25,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”கர்நாடகத்தில் உள்ள கபினி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.

Advertisement

Advertisement

விரைவில் அணை நிரம்பும் என்று கர்நாடக முதல்வரே சொல்லியிருக்கிறார்.

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று இரண்டு நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டபோது, “கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை; குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும்” என்று கூறி கர்நாடக அரசின் பிரதிநிதிகள் தண்ணீர் திறந்து விட முடியாது என்றனர்.

இரண்டு நாள்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அணை எப்படி இரண்டே நாள்களில் நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? எப்படி இருப்பினும் இயற்கை வென்றது!” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Marxist Communist Party State Secretary P. Shanmugam has questioned how the Kabini Dam filled up in just two days

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments