தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் தொடரும் 'ரூ' குறியீடு!
தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு இடம்பெற்றிருப்பது பற்றி...
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ரூபாய் குறியீட்டிற்குப் பதிலாக கடந்தாண்டு தமிழ் எழுத்தான 'ரூ' என மாற்றப்பட்ட நிலையில், இந்தாண்டும் அது தொடர்கிறது.
மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களின் நிதிநிலை அறிக்கை இலச்சினையில் ரூபாய் குறியீடான ’₹’ இடம்பெற்று வருகின்றது. கடந்த 2024 - 25 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் இலச்சினையிலும் இந்த குறியீடு இடம்பெற்றிருந்தது.
ஆனால், 2025 - 26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது, தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ் எழுத்தான ’ரூ’ இடம்பெற்றது.
Advertisement
Advertisement
இதையடுத்து, தேசிய ரூபாய் குறியீடான '₹'-க்கு பதிலாக தமிழ் எழுத்தான 'ரூ' பயன்படுத்தப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசிய சின்னத்தை மாநில அரசு புறக்கணிப்பதாகவும், இது பிரிவினைவாத மனநிலை என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்திருந்தார்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் தவெக ஆட்சி தனது முதல் நிதிநிலை அறிக்கையை இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யவுள்ளது.
இந்த நிலையில், நிதிநிலை அறிக்கையின் இலச்சினையில் தவெக அரசும் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ‘ரூ’ குறியீட்டைப் பயன்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு இலச்சினையில் சிவப்பு, கருப்பு, மஞ்சள் ஆகிய நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு மஞ்சள், சிவப்பு நிறங்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
The 'Rupee' symbol continues to feature in the Tamil Nadu budget logo!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.