பட்ஜெட்டுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயருமா? நிதித்துறை செயலர் விளக்கம்!
அரசின் வருவாயைப் பெருக்க பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா? என்பது குறித்து நிதித்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளது குறித்து...
தமிழகத்தில் வருவாயைப் பெருக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுவரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா? என்பது குறித்து நிதித்துறை செயலாளர் சித்திக் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் இன்று 2026 - 27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில், தவெக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அளவு குறித்து நிதித்துறை செயலாளர் சித்திக் விளக்கம் அளித்தார்.
Advertisement
Advertisement
அதில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ரூ. 560 கோடி.
வெற்றி வீடு ரூ. 1000 கோடி.
சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டம் ரூ. 313 கோடி.
ஊரக சாலைகள் புனரமைப்பு பணிகளுக்காக ரூ. 504 கோடி.
ஊரகப் பகுதியில் செயல்படும் தமிழ்நாடு வெற்றி இயக்கத்துக்கு ரூ. 2203 கோடி.
200 யூனிட் இலவச மின்சாரத்துக்காக ரூ. 1,545 கோடி.
பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ. 6082 கோடி.
அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ. 812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், வருவாய் மிகவும் குறைவாகவே உள்ளதால் அதனை பெருக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார். பெட்ரோல், டீசல் விலை ஏற்கெனவே உயர்ந்துள்ளதால், வரிகளை உயர்த்தும் திட்டம் இல்லை. எரிபொருளில் பெரும்பாலான வரி மத்திய அரசுக்கே செல்கிறது எனக் குறிப்பிட்டார்.
Will petrol and diesel prices rise Finance Secretary clarifies
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.