FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரூ.10 கோடியில் ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்‘

இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட் திட்டமாக தமிழக வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு வெளியானது.

இல்லத்தரசிகள் வீட்டுத் தோட்டம் - Dipr
பகிர்:

வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் வீட்டில் தோட்டம் அமைத்து வருவாய் ஈட்டும் வகையில், தவெக தலைமையிலான அரசு இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

2026 - 27ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேரவையில் உரையாற்றி வருகிறார்.

இந்த பட்ஜெட்டில், வீட்டில் இருக்கும் பெண்கள், வீட்டுத் தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம்

வீட்டுத்தோட்டங்களில் இரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி நச்சுத்தன்மையற்ற பழங்களும் காய்கறிகளும் உற்பத்தி செய்யப்படுவதால் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறைகிறது.

எனவே, நகர்ப்புரங்களில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் கிராமப்புரங்களில், வீட்டைச் சுற்றியுள்ள நிலப் பகுதிகளிலும் செடி வளர்ப்புப் பைகளுடன் கூடிய தொகுப்புகள், செங்குத்துத் தோட்டம் மற்றும் நீரியல் தோட்டம் ஆகிய அமைப்புகளில் காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகள் போன்றவற்றை வளர்த்து மனமலர்ச்சியையும், நலமான சூழலையும் ஏற்படுத்த "வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் திட்டம்" நடப்பாண்டில் ரூ.10 கோடி மாநில நிதியில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள பெண்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். அனைத்துக் காய்கறிகளும் வீட்டிலேயே, ஆரோக்கியமானதாக கையிலேயே கிடைக்கும் இந்த திட்டத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் மாடித்தோட்டம் திட்டம் நடைமுறையில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ரூ.4 கோடியில் சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு திட்டம்

8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் ரூ.27.82 கோடியில் அமைக்கப்படும் என்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

summary

jackpot homemakers Major announcement in the TN agriculture budget

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments