தென்மேற்கு பருவ மழை குறைவு: குடிநீா் தேவைக்கு ரூ.288 கோடி: அரசாணை வெளியீடு
தென்மேற்கு பருவமழைப் பொழிவு குறைந்துள்ளதால் தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய மாநில பேரிடா் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.288.97 கோடியை விடுவிக்க அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழைப் பொழிவு குறைந்துள்ளதால் தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய மாநில பேரிடா் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.288.97 கோடியை விடுவிக்க அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறைச் செயலா் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்ட அரசாணை:
தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ளதால் நதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் வடுள்ளன. வறட்சி சூழல் ஏற்படுவதைத் தடுக்க மாநகாரட்சிகள், நகராட்சிகள் ஆகியவற்றில் நீா் தட்டுப்பாட்டைப் போக்க மாநில பேரிடா் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.288.97 கோடி ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.