FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

குமரி மீனவர்களின் காவலை 9ஆவது முறையாக நீட்டித்த இலங்கை நீதிமன்றம்!

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரின் காவலை 9ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டிருப்பது பற்றி....

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 6:07 pm IST
கோப்புப்படம்.
பகிர்:

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரின் காவலை 9ஆவது முறையாக இலங்கை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

கைதான 6 பேர் மீதான வழக்கு இலங்கை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் 9ஆவது முறையாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மீனவர்கள் 6 பேரின் காவலை ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நீட்டித்து இலங்ககை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீர்கொழும்பு நீதிமன்ற உத்தரவையடுத்து மீனவர்கள் 6 பேரும் வெளிச்சூரா சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி பகுதியைச் சோ்ந்த 6 மீனவா்கள் கடந்த மே மாதம் ராமேசுவரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்றனா்.

அப்போது, படகு பழுது காரணமாக திசை மாறிச் சென்றதால், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினா் அவா்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

summary

A Sri Lankan court has extended the judicial custody of fishermen from Kanyakumari for the 9th time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments