FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு!

தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

கோவி. செழியன் | எடப்பாடி பழனிசாமி - TN
பகிர்:

அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் தீர்மானத்திற்கு திமுக மற்றும் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் இன்று (திங்கள்கிழமை) தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

முதல்வர் விஜய் இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்து பேரவையில் பேசினார்.

Advertisement

Advertisement

"தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்த தீர்மானத்திற்கு திமுக மற்றும் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

திமுக தரப்பில் பேசிய கோவி. செழியன், "தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்று பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது திமுக அரசுதான். 2021 டிச. 12ல் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அந்த தீர்மானத்தை கொண்டு வந்தார்.

அதேபோல தமிழ்நாடு என பெயர் சூட்டியது அண்ணா, தமிழ்த்தாய் வாழ்த்தைக் கொண்டுவந்தது கருணாநிதி. தமிழ் மொழியை செம்மொழி ஆக்கியது, செம்மொழி தமிழாய்வு நிறுவனம் கொண்டு வந்தது உள்ளிட்ட தமிழ் வளர்ச்சிக்க்கான பல செயல்களை திமுக செய்துள்ளது" என்று கூறி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

அதேபோல அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "தமிழ் என்று வரும் நேரத்தில் நாம் அனைவரும் ஒரே குரலில் ஒலிக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரானது அல்ல. தேசப்பற்றும் மொழிப்பற்றும் வேறு வேறானது அல்ல" என்று கூறி தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தார்.

summary

Tamil Thai Vazhthu: DMK and AIADMK support the resolution

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments