தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என்று பேரவையில் ஆதவ் அர்ஜுன் கூறினார்.
தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது. ஆனால், அது அரசியலில் பிரதிபலிக்கவில்லை. தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுன் கூறினார்.
மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானத்தை தமிழக அரசு புதன்கிழமை சட்டப்பேரவையில் கொண்டுவந்தது. அதன் மீது, பேரவை உறுப்பினர்கள் விவாதம் நடத்தினர்.
முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று தனித் தீர்மானம் கொணடு வரப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தொகுதி மறுவரையறை எதிர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுன், தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது. ஆனால், அது அரசியலில் பிரதிபலிக்கவில்லை. தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்.
தென் மாநிலங்களுக்கு தொகுதிகளை 50 சதவிகிதம் உயர்த்தினாலும் பாதிப்புதான் ஏற்படக்கூடும். வட இந்திய ஆதிக்கம் உருவாகும் சூழல் ஏற்படும். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தும்போது, இருந்து யாரும் வெளிநடப்பு செய்யாமல் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். அரசியல் ரீதியாக திமுகவும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக இருந்து அதனை எதிர்க்க வேண்டும்.
தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வர வேண்டும். தற்போது 5 முதல் 6 இந்தி பேசும் வட மாநிலங்கள் ஒன்றிணைந்தாலே பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் உள்ளது. மாநில சுயாட்சிக்காக கருணாநிதியும் ஜெயலலிதாவும் குரல் கொடுத்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மாறுபடும் நேரத்தில் நமக்கான உரிமை பறிபோகும்.
நீட்டை விட முக்கியமான தீரம்னம் தொகுதி மறுவறையறைக்கு எதிரான தீர்மானம். தொகுதி மறுவறையறைக்கு எதிராக முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் மு.க. ஸ்டாலின். அதனை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டார் ஆதவ் அர்ஜுன்.
மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை 543-ஆக நிரந்தரமாக்க வேண்டும். எதிா்வரும் மக்களவை, பேரவைத் தோ்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தனித் தீா்மானம் இன்று முன்மொழியப்பட்டு விவாதங்களுக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
A Prime Minister must emerge from Tamil Nadu: Aathav Arjun speaks in the Assembly.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.