FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!

முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிகளை மேற்கொள்ள ரூ. 5.5 கோடி மதிப்பிலான டெண்டர் அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 4:58 pm IST
முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு முதல்வர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 வது தளத்துக்கு மாற்றப்படும் நிலையில், நிர்வாக அலுவலக வசதிகளை மேற்கொள்ளும் பணிகளுக்காக ரூ. 5 கோடியில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

350 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியம்மிக்க புனித ஜாா்ஜ் கோட்டையின் முதல் தளத்தில் முதல்வா் ஜோசப் விஜய்யின் அலுவலகம் அமைந்துள்ளது. முன்னாள் முதல்வா்கள் பயன்படுத்திய இந்த அறைக்கு அருகே சட்டப்பேரவை, அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன.

இந்த நிலையில், இடப் பாற்றாக்குறை காரணமாக முதல்வரின் அலுவலகம் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்துக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Advertisement

Advertisement

அத்துடன், முதல்வரின் முதன்மைச் செயலர்கள் மற்றும் ஆலோசகர்களின் அறைகளும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்துக்கு மாற்றப்படவுள்ளது.

ஏற்கெனவே, 10வது தளத்தில் இயங்கிவந்த செய்தி, மக்கள் தொடர்புத் துறை பிரிவுகள் கலைவாணர் அரங்குக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்தில் மாற்றம் செய்யப்படும் முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகளின் அலுவலக வசதிகள் செய்யும் பணிகளுக்கு ரூ. 5.5 கோடியில் பொதுப்பணித் துறை டெண்டர் கோரியுள்ளது.

பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் மூன்று பிரிவுகளாக பிரித்து டெண்டர் கோரப்பட்டுள்ளது.

10-வது தளத்தில் உள்ள பிளாக் - 1க்கு ரூ. 2.41 கோடியும், பிளாக் - 2க்கு ரூ. 2.01 கோடியும், பிளாக் - 3க்கு ரூ. 1.12 கோடியும் டெண்டர் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வருகின்ற செப். 1 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் டெண்டர் கோர விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Chief Minister Vijay's new office! Tender worth Rs 5.5 crore!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments