இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 20 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் இன்று (ஆக. 20) மரியாதை செலுத்தினார்.
வாட்ஸ் ஆப்பில் நுகர்வோர் சேவை, முக அங்கீகார வசதி... உணவுத்துறை அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!
சட்டப்பேரவையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்த அமைச்சர் ப. வெங்கடரமணன், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
தொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய் பேச்சு அன்றும் இன்றும்!
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இன்று தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தொகுதி மறுவரையறையால் எந்தவொரு மாநிலமும் பாதிக்கப்படாது என்று உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்திப் பேசியிருக்கிறார்.
Advertisement
Advertisement
பேரவையில் எம்எல்ஏக்களுக்கு கார் அறிவிப்பு! வாசலில் வந்து நின்ற சொகுசு கார்கள்!
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த அடுத்த நாளே, தலைமைச் செயலக வளாகத்தில் மகிந்திரா நிறுவன கார்கள் நிறுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டது சரி: உயர் நீதிமன்றம்
தமிழக சட்டப்பேரவையில் 21 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை பேரவைத் தலைவர் கைவிட்டது சரியானது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில், தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம்! முதல்வர் விஜய் பேச்சு
நீட் விலக்கு, ஒசூரிலிருந்து பெங்களூர் மெட்ரோ ரயில் நீட்டிப்பு, தொகுதி மறுவரையறையில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!
நெல்லை மாவட்டம் இழந்தகுளம் பகுதியில் 4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திருச்சபை பங்குதந்தையாக இருந்த ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமைச்சர்களின் நாய்களுக்குக் கூட சிறந்த வசதி!
மகாராஷ்டிரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை குறித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே.
செளமியா அன்புமணி காட்டம்
தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்றால் அது என்.எல்.சி.தான் என்று பாமக எம்.எல்.ஏ. செளமியா அன்புமணி வியாழக்கிழமை சட்டப்பேரவையில் பேசினார்.
மாநாடு தொடங்கியது!
சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்களின் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
ஆபரணத் தங்கத்தின் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,16,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!
தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜீவ் காந்திக்கு மாணிக்கம் தாகூர் புகழஞ்சலி!
தேசத்தின் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் நவீன வளர்ச்சிக்காகத் தன் இன்னுயிரையே தியாகம் செய்த தலைவர் ராஜீவ் காந்தியின் தியாகமும் சிந்தனைகளும் என்றென்றும் நமக்கு வழிகாட்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 20) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி கோரி திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கு, தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு, திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் வெற்றிக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 20) விசாரணைக்கு வருகின்றன.
பெ. சண்முகம் கடும் கண்டனம்!
கம்யூனிஸ்டுகள் கணக்கெடுப்பு குறித்த விவரங்களைக் கேட்ட வட்டாட்சியரின் இடமாற்றம் அரசின் மோசமான அணுகுமுறை என்று சிபிஐ(எம்) மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.