எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க முதல்வர் விஜய் திட்டம்!
முதல்முறை எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்...
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சில நாள்களுக்கு முன்பு விசிக எம்எல்ஏ ஜோதிமணி பேசுகையில், என்னைப் போன்ற எம்எல்ஏக்கள் பலருக்கும் பொருளாதார வசதி இல்லாததால் எங்களுடைய தொகுதி முழுவதும் சென்று ஆய்வு செய்ய எங்களிடம் கார் இல்லை என்றும், என்னைப்போல பல சட்டப்பேரவை உறுப்பினர்களின் நிலையும் இப்படித்தான் இருப்பதாகவும் அரசு இதனை கவனத்தில் கொண்டு கார் மற்றும் உதவியாளர் வழங்க வேண்டும் என்றும் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை முன்வைத்தார்.
அப்போது பேரவைத் தலைவர், "முதல்வரின் கரங்கள் கிள்ளிக் கொடுக்கும் கரங்கள் அல்ல, அள்ளிக் கொடுக்கும் கரங்கள். இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்" என்றார்.
Advertisement
Advertisement
இதையடுத்து சட்டப்பேரவைக்கு முதல்முறையாகத் தேர்வானவர்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Chief Minister Vijay plans to provide cars to MLAs
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.