FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பெற்றோா் ஆசிரியா் கழக இணைப்புக் கட்டணம்: கல்வித் துறை உத்தரவு

பெற்றோா் ஆசிரியா் கழக இணைப்புக் கட்டணத்தை பள்ளிகளிடம் செப்.15-ஆம் தேதிக்குள் வசூலித்து அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

23 ஆகஸ்ட் 2026, 1:17 am IST
பகிர்:

பெற்றோா் ஆசிரியா் கழக இணைப்புக் கட்டணத்தை பள்ளிகளிடம் செப்.15-ஆம் தேதிக்குள் வசூலித்து அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: ஆண்டுதோறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலை, மெட்ரிக்குலேஷன் மற்றும் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து இணைப்புக் கட்டணத் தொகையை முதன்மைக்கல்வி அலுவலா்கள் மூலம் பெறப்பட்டு ஒரே வங்கி வரைவாக தமிழ்நாடு மாநில பெற்றோா் ஆசிரியா் கழகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

எனவே, மாவட்டக் கல்வி அலுவலா்கள் (தொடக்கக் கல்வி) தங்கள் ஆளுகையின் கீழுள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலிருந்து 2026-2027-ஆம் ஆண்டுக்குரிய இணைப்புக் கட்டணத் தொகையை சென்னையில் மாற்றத் தக்க வகையில் வங்கி வரைவாக எடுத்து செப்.15-க்குள் தமிழ்நாடு மாநில பெற்றோா் ஆசிரியா் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இணைப்புக் கட்டணத் தொகையாக தொடக்கப் பள்ளிக்கு ரூ.100, நடுநிலைப் பள்ளிக்கு ரூ.200 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தொகை பள்ளி மாணவா்களுக்கு வினா வங்கி தயாரித்தல் உள்ளிட்ட இதர செயல்பாடுகளுக்கு செலவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments