கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை!
கர்நாடகத்தில் கொல்லப்பட்ட 3 தமிழர்களில் 2 பேர் மிகவும் அருகில் இருந்து சுடப்பட்டதாகத் தகவல்...
கர்நாடகத்தில், வனத்துறையினரால் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களில் 2 பேர் மிகவும் அருகில் இருந்து சுடப்பட்டதாக, உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டம், காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் வனப்பகுதியில் மான்களை வேட்டையாடியதாகக் குற்றஞ்சாட்டி அப்பகுதியைச் சேர்ந்த 3 தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் கடந்த ஆக.15 ஆம் தேதி சுட்டுக்கொலை செய்தனர்.
இந்த நிலையில், கொல்லப்பட்ட 3 தமிழர்களின் உடல்களில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூராய்வு சோதனையின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், கொல்லப்பட்ட செபாஸ்டியன் டேவிட் குமார் (வயது 36) மற்றும் அந்தோனிசாமி பி (50) ஆகியோர் மிக அருகில் இருந்து சுடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில், ஜான் ரோஸ் பீட்டர் (42) எனும் மற்றொரு தமிழரும் கொல்லப்பட்டார்.
Advertisement
Advertisement
ஆனால், இந்த அறிக்கை கர்நாடக வனத்துறையினர் கூறியதற்கு எதிராக அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மானை வேட்டையாட சென்ற 3 தமிழர்களையும் கர்நாடக வனத்துறையினர் சரணடைய சொன்னதாகவும், அதற்கு அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் தற்காப்புக்காகப் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், மைசூரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற மூன்று தமிழர்களின் உடற்கூராவுச் சோதனையில், மிகவும் அருகில் இருந்து செபாஸ்டியனின் இடதுபுற நெஞ்சில் சுடப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், மிகவும் அருகில் இருந்து அந்தோனிசாமியின் வயிற்றில் சுடப்பட்டதால் அவர் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்கு, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post-mortem report reveals that two of the three Tamils brutally shot dead by the Forest Department in Karnataka were shot from very close range.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.