FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோடிக்கணக்கில் ஆன்லைன் மோசடி: பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை

மதுரை அருகே நடந்த ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து...

இளைஞர் தற்கொலை - பிரதிப் படம்
பகிர்:

மதுரை அருகே நடந்த ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேலூர் நடத்தப்பட்ட எஃப்க்யூஎல் மோசடியில் பாதிக்கப்பட்ட நத்தம் பகுதியைச் சேர்ந்த ராசு என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் திண்டுக்கல் - மதுரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், நத்தம் - மதுரை சாலையில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.

Advertisement

Advertisement

மதுரை மேலூர், அலங்காநல்லூர் பகுதிகளில் எஃப்க்யூஎல் செயலி வாயிலாக கிரிப்டோகரன்சி மூலம் பணத்தை இரட்டிப்பாக்கலாம் என நடைபெற்ற ஆன்லைன் மோசடியில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்கில் பணத்தைப் பறிகொடுத்துள்ளனர்.

மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பலரும் புகார் அளித்துள்ளனர். ஒரே குடும்பத்தில் ஒருவருக்கொருவர் தெரியாமல் பணத்தை முதலீடு செய்து இழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, இதுவரையில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்து மீது பரிவர்த்தனை செய்ய தடைவிதித்து பதிவுத் துறைக்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

summary

Youth commits suicide after falling victim to online fraud

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments