இன்றைய செய்திகள் ஜூலை 6 - நேரலை
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.
ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்
ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர் என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
உணவு பாதுகாப்பு சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
ரூ.7,000 கோடி ... மழையால் 2 மாதங்களில் இடிந்து விழுந்த சுரங்கம்!
கனமழை காரணமாக மும்பை - புணே இடையிலான அதிவிரைவுச் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட சுரங்கப் பாதை சேதமடைந்தது.
Advertisement
Advertisement
ரூ.7,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட நிலையில், ஒருசில வாரங்களிலேயே சுரங்கப் பாதையின் ஒரு பகுதி உருக்குலைந்து சேதமடைந்துள்ளது.
தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!
தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் இயற்ற நடவடிக்கை! வன்னி அரசு
என் புதிய வழி - நடிகை கனிகா பேச்சு
யோகாசனப் பயிற்சியால் தன்னை லேசாக உணர்வதாக நடிகை கனிகா தெரிவித்துள்ளார்.
மூன்று முடிச்சு தொடரில் நடிக்கும் பிரபல தொகுப்பாளர்!
மூன்று முடிச்சு தொடரில் பிரபல தொகுப்பாளர் துரை ராஜ் நடித்து வருகிறார். தொலைக்காட்சிகளில் நேரலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்த இவர், தற்போது நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்து - முஸ்லிம் நட்பு!
இந்து - முஸ்லிம் நட்பின் ஆழத்தை விளக்கும் வகையில் நடிகை வைஷ்ணவி மற்றும் ஸீபா ஷெரின் ஷாயிக் பகிர்ந்துள்ள படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 13 பேர் பலியாகியுள்ளதாக அமைச்சர் கிரீஷ் மகாஜன் தெரிவித்தார்.
கமேனி இறுதி ஊர்வலம்
ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து கொல்லப்பட்ட அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலம் திங்கள்கிழமை காலை தொடங்கியது.
ஆனால், அவரது மகனும், ஈரானின் தற்போதைய தலைமை மதகுருவுமான மோஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் வரவில்லை.
பழனி முருகன் கோயில் செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி
பழனிமலை முருகன் கோயிலில், ஆறு கால பூஜைகளில் பங்கேற்கவும், ரோப் காரில் செல்லவும் கோயிலின் இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் தொடங்கியது. இதனால் முருகன் கோயில் செல்லும் பக்தர்களுக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
மும்பை கனமழை! கொரானாவுக்குப் பின் முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து! மிக அரிய நிகழ்வு
மும்பையின் நாடித்துடிப்பாக இருந்துவரும் டப்பாவாலா சேவை, அங்கு பெய்துவரும் கனமழை காரணமாக இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?
தமிழ் சினிமாவில், தனக்கென ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் நடிகை த்ரிஷா, அண்மையில், தன்னுடைய அம்மா உமா கிருஷ்ணனின் 70-வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்.
பிரதமர் மோடி புறப்பட்டார்
பிரதமா் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக தில்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கரூர் பலி - நாளை விசாரணை!
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தமிழ்நாடு முதல்வா் சி. ஜோசப் விஜய் உள்ளிட்டோருக்கு எதிராக திமுக தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
இளையராஜா பாடலை ஜி.வி. பிரகாஷ் பயன்படுத்த தடை
ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில் இளையராஜா பாடலைப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
தவெக கூட்டணியில் விசிக
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலி
உக்ரைன் தலைநகரை குறைத்து ரஷியா நடத்திய ஏவுகனை, ட்ரோன் தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.
நிலச்சரிவு: மும்பை - புணே ரயில் சேவை பாதிப்பு
கனமழை காரணமாக ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மும்பை- புணே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பழனி செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி
பழனிமலை முருகன் கோயிலில், ஆறு கால பூஜைகளில் பங்கேற்கவும், ரோப் காரில் செல்லவும் கோயிலின் இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதி இன்று முதல் தொடங்கியது.
தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு (ஜூலை 6, 2026)
வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது.
மும்பையில் கனமழை: 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி!
மும்பையில் கனமழைக்கு 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்!
பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.