மருத்துவமனைகளில் நிலவும் குறைகளைக் களைய 50 நோடல் அதிகாரிகள் நியமனம்!
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள சீர்கேடுகளைக் களைவதற்காக 50 நோடல் அதிகாரிகள் நியமிக்கப்படுவது குறித்து...
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள சீர்கேடுகளைக் களைவதற்காக 50 நோடல் அதிகாரிகள் நியமிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகக் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் 31 மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவர் - செவிலியர் பற்றாக்குறை, நோயாளிகள் பராமரிப்பு, தூய்மைப் பணி, குடிநீர், கழிப்பறை, திருட்டு, நாய்கள் தொல்லை, ஊழல், முறைகேடு உள்ளிட்ட 304 குறைபாடுகள் இருப்பதாக அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனையடுத்து, வெளியிடப்பட்ட இந்த அறிக்கை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சீர்கேடுகளைக் களையவும் அனைத்து மருத்துவமனை நிறுவனங்களிலும் 50 நோடல் அதிகாரிகள் நியமிக்க மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
50 Nodal Officers Appointed to Address Shortcomings in Hospitals
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.