FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தைவிட்டு விலகுகிறதா ஹூண்டாய்? முதலீட்டை உறுதிசெய்ய தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் முதலீட்டை உறுதிசெய்யுமாறு தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியது குறித்து...

Updated On : 10 ஜூலை 2026, 8:01 pm IST
முதல்வர் விஜய் | எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் முதலீட்டை உறுதிசெய்யுமாறு தவெக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பான பேச்சுவார்தை நடத்தியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

ஏற்கெனவே இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 38,000 கோடி மதிப்பிலான முதலீடு செய்யவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்நிறுவன முதலீடு நம் மாநிலத்தின் கைவிட்டு போகக்கூடிய ஒரு அச்சமான சூழல் உள்ளது.

Advertisement

Advertisement

ஹூண்டாய் நிறுவனம் 1990-களில் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்துள்ள நிறுவனம். அது இன்னொரு மாநிலத்தை தற்போது நாடுவது என்பதே, இன்றைய தவெக அரசு எப்படிப்பட்ட நம்பிக்கைக்கு பாத்திரமற்ற அரசாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

இதற்கு மூலக் காரணம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு துவங்கிய தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தை முறையாக நிர்வகிக்காமல், அதன் செயல்பாடுகளை மழுங்கடிக்கும் நோக்கில் இன்றைய தவெக அரசு செயல்படுவது தான்.

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தில் இருந்து 10 அதிகாரிகள் பதவி விலகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் முதலீடுகளைப் பாதிக்கும் என்பதை இந்த அரசு கொஞ்சமாவது உணர்கிறதா?

கற்றுக்குட்டி அமைச்சரவையின் அமைச்சராக உள்ள இன்றைய தொழிற்துறை அமைச்சர், இன்னொரு ரீல் வெளியிட்டால் இந்த நிறுவனம் வந்துவிடும் என நினைத்தால், அப்படிப்பட்ட எண்ணத்தின் முட்டாள்தனத்தை விவரிக்க வார்த்தையே இல்லை.

உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்தோடு பேச்சுவார்தையை விரைவாக முடித்து, அவர்களின் முதலீட்டை உறுதி செய்ய வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

summary

ADMK Leader Edappadi Palaniswami urges the TVK government to secure Hyundai's investment in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments