FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 11 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Updated On : 11 ஜூலை 2026, 12:48 pm IST
நியூஸி. பிரதமர் லக்ஸனுடன் பிரதமர் மோடி - AP
பகிர்:
Updated On : 11 ஜூலை 2026, 12:48 pm IST

திமுக - அதிமுக ஒன்றிணையுமா? எந்தக் கூட்டணியும் நியாயமே! டிடிவி தினகரன் பதில்

திமுகவும் அதிமுகவும் ஒன்றிணையுமா என்ற கேள்வி எழுப்புகிறீர்கள். ஆனால், அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் ஒன்றுசேர்க்கும்.

திமுக கூட்டணியில் இருப்பவர்களை தன் பக்கம் இழுத்து அமைச்சரவையில் இடமளித்து, தவெக கூட்டணியில் வைத்துக்கொள்வது நியாயமெனில், எந்தக் கூட்டணியும் நியாயம்தான்.

Updated On : 11 ஜூலை 2026, 11:00 am IST

நேற்று தங்கம் வாங்கியிருந்தால் வருத்தப்படுவீர்கள்! இன்றைய விலை நிலவரம் (ஜூலை 11)

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 11, சனி) சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,06,400-க்கும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,300-க்கும் விற்பனையாகிறது.

Advertisement

Advertisement

Updated On : 11 ஜூலை 2026, 11:00 am IST

விஜய்யின் வெற்றி நிற்காது, நிலைக்காது; அது ஒரு கானல் நீர்! அதிமுக

இன்று அமைந்திருக்கும் ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சிதான். பல்வேறு கூட்டுக் கட்சிகளின் கலவை. இது திமுகவுடன் வெற்றிபெற்ற கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து அமைந்திருக்கிற ஓர் ஆட்சி. ஆனால், இந்த வெற்றி நிச்சயமாக நிரந்தரமானது அல்ல. இது கானல் நீர்: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Updated On : 11 ஜூலை 2026, 11:00 am IST

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் தாக்கப்படாது: ஈரான் அறிக்கை வெளியிட அமெரிக்கா கெடு

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் தாக்கப்படாது என உறுதியளிக்க வேண்டும் என ஈரான் அறிக்கை வெளியிடுமாறு அமெரிக்கா கெடு விதித்துள்ளது.

Updated On : 11 ஜூலை 2026, 11:00 am IST

மோடி ஆட்சியின்கீழ் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளிவந்துள்ளனர்: நியூஸி. பிரதமர்

இந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் லக்ஸன் பேசியவாது, "நரேந்திர மோடி ஆட்சியின்கீழ், இந்தியாவில் தற்போது 25 கோடி பேர் வறுமையிலிருந்து வெளிவந்துள்ளனர். தற்போது 44 கோடி பேர் உள்ள நடுத்தர வர்க்கத்தினர், அடுத்த 10 ஆண்டுகள் முடிவில் 75 கோடியாக மாறுவர். இது ஒரு நம்பமுடியாத மாற்றம்" என்று தெரிவித்தார்.

Updated On : 11 ஜூலை 2026, 11:00 am IST

தாய்நாட்டிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்தவர் அழகு முத்துக்கோன்: முதல்வர் விஜய்

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி, முதல்வரின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைக் குரல் எழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளில் எனது மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

Updated On : 11 ஜூலை 2026, 11:00 am IST

இந்தியா - நியூஸிலாந்து இடையேயான வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல்: பிரதமர் மோடி

நியூஸிலாந்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, "இரு கடல்சார் நாடுகளுக்கிடையேயான இந்த ஒத்துழைப்பு, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டும் முயற்சிகளை மென்மேலும் வலுப்படுத்தும். இந்த ஒப்பந்தம், இருதரப்பு உறவுகளுக்கும் புதிய வேகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் ஒரு வரலாற்று மைல்கல்" என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments