214 கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
அறங்காவலர்கள் நியமனத்துக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து...
இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட அறங்காவலர்கள் நியமனத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களின் அறங்காவலர் பொறுப்புகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என முன்னதாக அறிவிக்கப்பட்டடு இருந்தது.
நியமனம் செய்யப்படவுள்ள திருக்கோயில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்பப் படிவம் ஆகியவை அறநிலையத் துறையின் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணையவழியில் பூர்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, விரைவஞ்சல் மூலமாகவோ சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்துக்கும் அனுப்பலாம்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அறங்காவலர்கள் நியமனத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன்(ஜூலை 22) நிறைவடைந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆக. 12-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
The deadline for applying for the appointment of trustees under the Hindu Religious and Charitable Endowments Department has been extended.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.