FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

‘மிஸ் பண்ணுவேன் அண்ணா...’ ஜன நாயகன் படம் பார்த்து வருண் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

ஜன நாயகன் படம் பார்த்து வருண் சக்ரவர்த்தி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 24 ஜூலை 2026, 5:41 pm IST
விஜய்யுடன் வருண் சக்ரவர்த்தி. - (கோப்புப்படம்)
பகிர்:

முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் படம் பார்த்து கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் அ. வினோத் - விஜய் கூட்டணியில் உருவான 'ஜன நாயகன்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே, கடந்த ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் பிரச்னைகளால் படம் வெளிவர முடியாமல் போனது.

பல்வேறு தடைகளைக் கடந்து ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை உலகளவில் 8,000-க்கும் மேற்பட்ட திரைகளில் மிகப் பிரமாண்டமாக வெளியானது.

Advertisement

Advertisement

படத்தின் டைட்டில் கார்டில் ’மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்’ நடிப்பில் எனத் திரையில் வரும்போது, அவரது ரசிகர்களும் தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகரும் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளருமான வருண் சக்ரவர்த்தி, ஜனநாயகன் படம் பார்த்துவிட்டு நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், “ஜனநாயகன்!! என்னவொரு பிரியாவிடைப் படம்!! ஒவ்வொரு விநாடியும் பிடித்திருந்தது!! ரசிகர்ளுக்காக இவ்வளவுத் தருணங்களைக் கொண்ட இந்தப் படத்துக்காக இயக்குநர் அ. வினோத் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!!

அனைத்திற்கும் நன்றி அண்ணா... காதலுக்கு மரியாதை படத்தில் இருந்து நான் உங்களுடைய ரசிகன். சிறுவயது முதலே எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்துள்ளீர்கள். உங்களை மிஸ் பண்ணுவேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.

summary

Team India star bowler pens emotional message after watching Thalapathy Vijay's farewell film

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments