தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யும் நோக்கில் சட்டத் திருத்த மசோதா: கனிமொழி
தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யும் நோக்கில் சட்டத் திருத்த மசோதா உள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளது பற்றி...
தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யும் நோக்கத்தில் சட்டத் திருத்த மசோதா உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி புதன்கிழமை (ஜூலை 29) தெரிவித்துள்ளார்.
தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு தடங்கல் ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் வகையிலான சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
Advertisement
Advertisement
வந்தே மாதரம் பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றமாக்கும் சட்டத் திருத்த மசோதவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறியும் மாநிலங்களவையில் நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு.
வந்தே மாதரத்தை வலிந்து திணிப்பதுடன், இதுவரை தமிழ்நாட்டில் முதல் பாடலாக பாடப்பட்டுவந்த தமிழ்த்தாய் வாழ்த்தை நிரந்தரமாக இருட்டடிப்பு செய்யும் நோக்கிலுள்ள இச்சட்ட மசோதாவை ஒருபோதும் ஏற்கமுடியாது என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
‘தேசிய கெளரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026’ என்ற பெயரிலான இந்த மசோதாவை இடதுசாரி எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினா்களின் கடும் எதிா்ப்புக்கு இடையே கடந்த ஜூலை 24 ஆம் தேதி மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
DMK MP Kanimozhi stated on Wednesday (July 29) that the legislative amendment bill aims to sideline the 'Tamil Thai Vazhthu'.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.