FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய ஜூலை 30 செய்திகள் - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Updated On : 30 ஜூலை 2026, 4:27 pm IST
பகிர்:
Updated On : 30 ஜூலை 2026, 4:27 pm IST

நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் 31 முதல்வர்களில் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் அதாவது 14 முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு வெளியிட்ட தரவு மூலம் தெரிய வந்துள்ளது.

Updated On : 30 ஜூலை 2026, 4:27 pm IST

அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!

தமிழ்நாட்டில் தவெக அரசின் வருகையின் காரணமாக அம்மா உணவகங்கள் புத்துயிர் பெற்றுள்ளன. அம்மா உணவகங்களில் தரமான உணவு ஏழை மக்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

Updated On : 30 ஜூலை 2026, 4:27 pm IST

தில்லி மாணவர் போராட்டத்தில் பயன்படுத்திய ஆயுதங்களின் விவரங்கள்: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களைக் கண்டித்து தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் ஆயுதப் படையினரும், காவல்துறையும் பயன்படுத்திய ஆயுதங்கள் பற்றிய பதிவுகளை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

Advertisement

Updated On : 30 ஜூலை 2026, 3:49 pm IST

தடை!

தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்களின் ஆடை, பொருள்களை சடங்கு என்ற பெயரில் வீசுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 30 ஜூலை 2026, 11:33 am IST

இந்திய தூதரகம் கண்டனம்

‘பாகிஸ்தான் காஷ்மீர்’ எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகத்துக்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Updated On : 30 ஜூலை 2026, 11:32 am IST

செந்தில் பாலாஜி முன்ஜாமீன் தள்ளுபடி

டாஸ்மாக் முறைகேடு தொடா்பான வழக்கில் முன் ஜாமீன் கோரிய திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On : 30 ஜூலை 2026, 10:54 am IST

தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை எவ்வளவு? ஜூலை 30 நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840-க்கு விற்பனையாகிறது.

Updated On : 30 ஜூலை 2026, 10:54 am IST

ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் அஜிங்க்யா ரஹானே அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை செய்துள்ள ரஹானே, 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 8,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

Updated On : 30 ஜூலை 2026, 10:54 am IST

இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளில் ஒரேயொரு ஆசிரியர்தான்!

இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் வெறும் ஒரெயொரு ஆசிரியருடன் இயக்கி வருவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Updated On : 30 ஜூலை 2026, 10:54 am IST

டாஸ்மாக் முறைகேடு வழக்கு! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக, திமுக முன்னாள் அமைச்சா் வி. செந்தில் பாலாஜி மீது தமிழக ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Updated On : 30 ஜூலை 2026, 10:54 am IST

மேக்கேதாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கை நிராகரிப்பு!

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, கர்நாடகத்தின் மேக்கேதாட்டு விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத் துறை ஆணையம் திருப்பி அனுப்பி வைத்ததாகத் தெரித்துள்ளது.

Updated On : 30 ஜூலை 2026, 10:54 am IST

பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான ‘ராமாயணா’ டிரைலர்!

நடிகர் ரன்பீர் கபூரின் 'ராமாயணம்' படத்தின் டிரெய்லர் இன்று (ஜூலை 30) அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானது.

Updated On : 30 ஜூலை 2026, 10:54 am IST

ஜோர்டானில் ஏவுகணை வீச்சு... ஈரான் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி!

ஜோர்டானில் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments