FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரஜினிகாந்த் அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலை

நடிகர் ரஜினியின் கட்சியில் சேர அழைப்பு பற்றி அண்ணாமலை பேச்சு...

Updated On : 5 ஜூன் 2026, 12:16 pm IST
அண்ணாமலை
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அவரது கட்சியில் சேர அழைப்பு விடுத்ததாக அண்ணாமலை கூறியுள்ளார்.

நேரலையில் பேசிய அவர்,

"2020 ஆக. 24 ஆம் தேதி தில்லியில் பாஜகவில் இணைய வரும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னை அழைத்தார். நான் அவரிடம் நிறைய பேசுவேன். அவருடைய அரசியல் பாதை எப்படி இருக்கும் என்றெல்லாம் பேசியிருக்கிறேன்.

Advertisement

Advertisement

அப்போது அவரது கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டுக்கு நல்லது. ஆனால் அவருக்கு எது நல்லது என்றால் அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. ஏனெனில் அந்த கரோனா நேரத்தில், மேலும் அவருக்கு உடல்நலப் பிரச்னைகளும் உள்ளன. அவர் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

அண்ணாமலைக்கு எது நல்லது, பாஜகவில் இணைகிறேன் என்று சந்தோஷிடம் சொன்னேன். அதைக் காப்பாற்ற வேண்டும் என்று ரஜினிகாந்திடம் மன்னிப்பு கேட்டு 'என்னால் வர முடியாது' என்று சொல்லி பாஜகவில் இணைந்தேன்.

ரஜினி அழைத்தபோதும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன். அவரும் பெருந்தன்மையாக அதை ஏற்றுக்கொண்டு அவருடைய அரசியல் பாதையை தீர்மானித்தார்.

தமிழ்நாட்டின் அடையாளம், பாரம்பரியத்தை நான் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. எப்போதுமே நான் பெருமைமிகு இந்தியன்.

பாஜகவுடனான கருத்து வேறுபாடுகள் 18 மாதங்களாக நீடித்தன. கடந்த டிசம்பர் மாதமே கட்சியில் இருந்து விலகுவதாக பாஜகவிடம் தெரிவித்துவிட்டேன். சட்டப்பேரவைத் தேர்தலை முடித்துவிட்டு ராஜிநாமா செய்ய கட்சித் தலைமை அறிவுறுத்தியது. அதன்படியே இதுவரை செயல்பட்டு வந்தேன்" என்று பேசினார்.

summary

I declined Rajini invitation and joined the BJP instead: Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments