FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நான் பாஜகவின் பி-டீம் இல்லை: அண்ணாமலை

தொகுதிக்குட்பட்டு வருவதால் மேக்கேதாட்டு அணை கட்ட டி.கே. சிவகுமார் தீவிரமாக முயற்சித்து வருகிறார் என அண்ணாமலை பேச்சு..

அண்ணாமலை - எக்ஸ்
பகிர்:

தான் பாஜகவின் பி-டீம் இல்லை என வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை (ஆக. 16) தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் வீ தி லீடர்ஸ் அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் நலன் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அண்ணாமலை பேசியதாவது:

Advertisement

Advertisement

’’நான் பாஜகவின் பி டீம் என்று பலர் கூறுகின்றனர். ஆனால், நான் அப்படி இல்லை. கட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ் மக்கள் நலனுக்காக என்றுமே உழைப்பேன். சேவை மனப்பான்மையுடன் வருபவர்களால்தான் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியும்.

ஆரம்பித்த 73 நாள்களில் 20 லட்சம் தன்னார்வலர்கள் வீ தி லீடர்ஸ் அமைப்பில் உருவாகியுள்ளனர். இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட எந்தவொரு அமைப்பிற்கும் இவ்வாறு நிகழ்ந்ததில்லை. நம் இயக்கத்தின் செயல்பாடுகளை பார்த்து பலர் நம் இயக்கத்தை நோக்கி வருவார்கள். விரைவில் 50 லட்சம் பேர் நம் இயக்கத்தில் இணைவார்கள். அதன் பிறகு அரசியல் இயக்கமாக இது மாறும்.

சென்னையில் வீட்டில் அமர்ந்துகொண்டு முக்கியமான முடிவுகளை முதல்வர் எடுக்கக் கூடாது. ஒவ்வொரு கிராமத்துக்குச் சென்று முடிவுகளை எடுக்க வேண்டும். கோபாலபுரத்தில் அமர்ந்துகொண்டு, பனையூரில் அமர்ந்துகொண்டு முடிவு எடுத்தால் அது சரிவராது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். இந்தியாவில் 80 லட்சம் பேர் உணவு டெலிவரி ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். இதில் 30% பேர் பட்டதாரிகள். 18 முதல் 24 வயது வரையில் உள்ள இளைஞர்களில் 40% பேருக்கு வேலை இல்லை.

2029 நாடாளுமன்ற தேர்தலில் 34 கோடி பேர் ஜென் ஸி தலைமுறையினர். அவர்களின் வாக்கு முக்கியம்.

சென்னையில் முன்பு பசுமையாக இருந்த இடம் 25%. இப்போது வெறும் 10% ஆக குறைந்துள்ளது. சென்னையில் 90% கார்கிரீட்தான் உள்ளது. பின்னர் நகரத்தில் எப்படி மக்கள் வாழ முடியும்.

பூமி வெப்பமாகிக்கொண்டே போகிறது. குடிக்க தண்ணீர் இல்லை. பூமிக்குள் இருக்கும் நீரை 73% உறிஞ்சி எடுக்கிறோம். எதிர்காலத்தில் மழை இல்லை என்றால் மக்களின் நிலை என்ன?

தனது தொகுதிக்குட்பட்டு வருவதால் மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும், கிராமங்களின் வளர்ச்சிக்காகவும் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். நீர் மேலாண்மை, கல்வி, கிராமப்புற வளர்ச்சிக்கு 5 ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்.

பள்ளிகள், நீர்நிலைகள், கிராமப்புறங்களை சீரமைக்க முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

ஊழல் குறைந்துள்ளது என்கிறார்கள், ஊழல் குறையவில்லை தொடங்கியுள்ள்து.

முதல்வர் லஞ்சத்துக்கு எதிராக இருக்கிறார். அதனை நாங்கள் பாராட்டுகிறோம். சில அமைச்சர்கள் கமிஷன் வாங்கத் தொடங்கியுளனர். ஆரம்பத்திலேயே அத்தகைய அமைச்சர்களுக்கு கடிவாளம்

போட வேண்டும். அமைச்சர்கள் 2%, 3% கமிஷன் கேட்கின்றனர். அந்த ஆடியோ என்னிடம் உள்ளது’’ என அண்ணாமலை பேசினார்.

summary

I am not the BJP's B-team We The Leaders K Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments