முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி
முதல்வரின் லண்டன் பயணம் குறித்து அண்ணாமலை கேள்வியெழுப்பியது பற்றி...
மதுரையில் வைகை சிற்பி - விருதுகள் வழங்கும் விழாவில் வி தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை பேசியதாவது, "நாமெல்லாம் ஒரு தலைவர்களா என திருமாவளவன் கேட்கிறார். அவரைப் பொருத்தவரையில், ஒரே ஒரு தலைவர் இருக்க வேண்டும்; அவருக்காக கைகட்டி ஊழியம் செய்ய வேண்டும் என்பதுதான். நாம் எல்லோரும் தலைவர்கள் என்பது புரட்சி.
தலைமைச் செயலகம் வேண்டாம் என்றால், அது எப்போது கட்டி, எப்போது செல்லப் போகிறார்கள்? பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்றால், அது எப்போது கட்டி, எப்போது செல்லப் போகிறார்கள்?
முதல்வர் லண்டனுக்கு அப்படி சென்றார், இப்படி சென்றார் என்றெல்லாம் சொல்கின்றனர். அதனைப் பற்றி பேசவே விரும்பவில்லை. ஏனெனில், அவர் லண்டனுக்கே போக வேண்டாம் என கூற விரும்புகிறேன்.
Advertisement
Advertisement
காரணம், பிரிட்டனின் வளர்ச்சியே வெறும் ஒரு சதவிகிதம்தான். அவர்களை முதலீடு செய்யச் சொன்னால், அவர்கள் எங்கு செல்வார்கள். அவர்கள் ஊரில் முதலீடு செய்வதற்கே அவர்களிடம் பணமில்லை.
இந்தியாவிலிருந்து டாடா, ஜாகுவார், மகிந்திரா ஆகியோர்தான் பிரிட்டனில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர்.
முதல்வர் இங்கிருந்து லண்டனுக்கு செல்வதைவிட, இங்கேயே இருக்கும் கோவை மற்றும் மதுரைக்கு வர வேண்டும். அவர் லண்டன் சென்றாலும், இங்குள்ள துணை நிறுவனங்கள்தான் பணம் கொடுக்கும். இதை வைத்தே எதிர்க்கட்சிகளும் அறிக்கைப் போரும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் ஆட்சிக்கு வருகிறபோது மட்டும்தான் இந்து சமய அறநிலையத் துறையை எதிர்ப்போம்.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கே சாட்சி. குடமுழுக்கை தவெக அரசு எப்படி நடத்தினர்? குடமுழுக்குக்கான டிக்கெட்டை சினிமாவில் பிளாக் டிக்கெட் விற்பதைப் போல விற்றுக் கொண்டிருந்தனர். ஆனால், அங்கு விஐபி-க்களும், விவிஐபி-க்கள் மட்டுமே இருந்தனர்.
மதுரை மக்கள் எங்கே இருந்தனர்? 4 பேருக்கு மட்டுமே தீர்த்தம் தெளித்தனர். மற்றவர்களுக்கெல்லாம் தண்ணீரைத்தான் தெளித்தனர். தண்ணீரைக் காவல்துறையிடம் கொடுத்துத் தெளிக்கச் சொல்கின்றனர். காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காக இருக்கின்றனரா? அல்லது தண்ணீர்த் தெளிப்பதற்காக இருக்கின்றனரா?
இதைப்போல் செய்தீர்கள் என்றால், கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையே குறையத் தொடங்கும்" என்று தெரிவித்தார்.
We The Leaders Founder K Annamalai questions the Chief Minister's London visit
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.