FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பாஜகவின் மற்றொரு முயற்சியே அண்ணாமலை- அமைச்சர் அருண்ராஜ்

பாஜகவின் மற்றொரு முயற்சியே அண்ணாமலை என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On : 6 ஜூன் 2026, 8:02 pm IST
கோவையில் அமைச்சர் அருண்ராஜ்.
பகிர்:

பாஜகவின் மற்றொரு முயற்சியே அண்ணாமலை என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை மிகவும் குறைவுதான். ஆனால் செவிலியர் பற்றாக்குறை இருக்கிறது. விரைவில் சரி செய்வோம். அதிமுக மட்டுமல்ல பல்வேறு கட்சிகளில் இருந்து தவெகவுக்கு வருகை தருகின்றனர்.

நடந்து முடிந்த தேர்தலில் 108 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. அதிமுக பொதுச்செயலர் எடுத்த முடிவுகள் அனைத்தும் தவறாகத்தான் போயுள்ளது. அதிமுக ஏன் இந்த நிலைக்கு வந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அண்ணாமலை இயக்கம் குறித்த கேள்விக்கு, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை.

Advertisement

Advertisement

ஆனால் மக்களால் ஏற்கப்படுவார்களா என்பதே முக்கியம். தமிழ்நாட்டில் பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. தற்போது இன்னொரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. பாஜக கறைபடிந்தவர்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பாஜகவுக்கு கண்டிப்பாக தோல்வி நிச்சயம்தான்.

அண்ணாமலை இயக்கத்தில் இணைந்திருப்பது பாஜக ஆதரவாளர்கள் என்றார்.

summary

Minister Arunraj has stated that Annamalai is just another attempt by the BJP.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments