விஜய்யை கார் வரை சென்று வழியனுப்பிய வைகோ!
வீட்டிற்கு வந்த முதல்வர் சி. ஜோசப் விஜய்யை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கார் வரை சென்று வழியனுப்பி வைத்தது குறித்து...
வீட்டிற்கு வந்த முதல்வர் சி. ஜோசப் விஜய்யை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கார் வரை சென்று வழியனுப்பி வைத்தார்.
முன்னதாக வீட்டு வாசலில் விஜய்யுடன் நின்றவாறு தொண்டர்களைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார். விஜய்யுன் வைகோவுடன் சேர்ந்து தொண்டர்களை நோக்கி கையசைத்தார்.
சென்னை அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இல்லத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் இன்று (மே 11) வருகைப்புரிந்தார்.
Advertisement
வைகோவின் மகன் துரை வைகோ, வீட்டு வாசலுக்கு வந்து விஜய்க்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர் விஜய்யை வீட்டினுள் துரை வைகோ அழைத்துச் சென்றார்.
வீட்டினுள் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி வைகோ மாலை அணிவித்தார். பின்னர் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வீட்டிற்குள் வைகோவை சந்தித்து விஜய் நலம் விசாரித்தார். முதல்வராக பதவியேற்ற விஜய்க்கு, வைகோ வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பின்னர் புறப்பட்ட விஜய்யை வாசலுக்கு அழைத்துச் சென்ற வைகோ, தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விஜய்யுடன் இணைந்து கையசைத்தார். தொடர்ந்து கார் வரை சென்று விஜய்யை வழியனுப்பி வைத்தார்.
இந்த விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
முன்னதாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு முதல்வர் விஜய் சென்று வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.