மேக்கேதாட்டு அணை: ஒரு செங்கல்லைக்கூட வைக்க விடமாட்டோம்! அமைச்சர் விஸ்வநாதன்
மேக்கேதாட்டு விவகாரம் குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
கர்நாடக அரசு, மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு ஒரு செங்கல்லைக்கூட வைக்க விடமாட்டோம் என உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
மதுரையில் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்(காங்கிரஸ்) செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு ஒரு செங்கல்லைக்கூட எடுத்துவைக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு இதுதான், ஒரு செங்கல்லைக்கூட வைக்க விடமாட்டோம். எங்களுடைய முதல்வரின் நிலைப்பாடு என்னவோ, அதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. 5 ஆண்டுகள் இந்த ஆட்சி நிலைத்து நிற்கும்.
Advertisement
Advertisement
முதல்வரின் கரத்தை வலுப்படுத்துவதற்கு, இந்த ஆட்சியை 5 ஆண்டுகள் கொண்டு செல்வதற்கு, காங்கிரஸ் பேரியக்கம் உறுதுணையாக இரும்புக்கோட்டையாக முதல்வரின் பின்னால் இருப்போம்" என்றார்.
மேலும், " முதல்வரே, பல்கலைக்கழக வேந்தர் என்பது முந்தைய அரசின் நிலைப்பாடு. முந்தைய அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு கிடையாது. வேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் முடிவு எடுப்பார்" என்று கூறினார்.
Mekedatu Dam: We will not allow even a single brick to be laid: Minister Viswanathan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.