தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா? - நயினார் நாகேந்திரன் பதில்
தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நயினார் நாகேந்திரன் அளித்த பதில் பற்றி....

தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நிகழ்வை இன்று காண வந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நிர்வாகி ஒருவரின் வீட்டின் மாடியில் நின்று தீபத்தூணை வழிபாடு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், "150 வருடப் போராட்டத்திற்குப் பின் தீபம் ஏற்றப்பட்டது மிக்க மகிழ்ச்சி.
முருகனுக்குத் தீபம் ஏற்றாமல் வேறு எங்கு ஏற்ற முடியும்? அந்நியப் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட கோயில்கள் மோடி ஆட்சியில் மீட்கப்பட்டு, பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் தர்மம் வென்றுள்ளது, இந்த உலகத்தில் முருகனுக்கு மிஞ்சிய கடவுளே கிடையாது.
Advertisement
Advertisement
தவெக அரசு 100-க்கு 100 தவறு செய்துவிட்டது. முதல்வர் ஜோசப் விஜய் தவறு செய்துவிட்டார். அங்கேயும் சில இந்துக்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தவறு என்று சொன்னால், அவர்கள் இந்தியாவிலேயே இருக்கத் தகுதியற்றவர்கள். வெளிநாடு செல்ல வேண்டும்.
தொகுதி மறுவரையறைக்கு தி.மு.க ஆதரவு அளிப்பது குறித்த கேள்விக்கு, எந்தக் காலகட்டத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதை எடுத்துள்ளார்கள். அது இந்த நாட்டிற்குச் செய்யும் நல்ல செயல்.
தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு, அது முருகப்பெருமானின் கையில் உள்ளது" என்றார்.