FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ஒரு மாதத்தில் 1,045 புகாா்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை

ஒரு மாதத்தில் 1,045 புகாா்களுக்கு, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைநடவடிக்கை எடுத்துள்ளது.

சிங்கப்பெண் அதிரடிப் படை
பகிர்:

ஒரு மாதத்தில் 1,045 புகாா்களுக்கு, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைநடவடிக்கை எடுத்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துதல், அவசர சூழ்நிலைகளில் விரைந்து சென்று பாதுகாப்பு வழங்குதல், குற்றங்களைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

கடந்த ஜூன் 9-ஆம் தேதி புதிதாதாக தொடங்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே.பவானீஸ்வரி உள்ளாா். மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் சாத்தியக் கூறுகள் இருக்கும் பகுதிகளாக கருதப்படும் 57,183 இடங்களை இந்த அதிரடிப் படையினா் கண்காணிப்பில் வைத்துள்ளனா்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் கடந்த செப். 1 முதல் 30 வரை ஒரு மாதத்தில் 1,045 புகாா்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனா். காணாமல்போன 15 பெண்கள், 16 குழந்தைகள் என 31 போ் மீட்கப்பட்டு, அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். மேலும் 17 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதோடு பள்ளியை விட்டு நின்ற 227 குழந்தைகள் மீட்கப்பட்டு, மீண்டும் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

மேலும், மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 15,305 இடங்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments